‘தனிமனித விருப்பம் மிக உன்னதமானதாக இருந்தாலும்கூட
அது - மக்களுக்கானதாக இல்லாத போதும்,
செயல்பாட்டிற்கு சாத்தியமற்றதாக இருக்கும்போதும்
வரலாறு அதனை நிராகரிக்கும்’
2009 ஜனவரி புதிய பயணம் இதழில் கவிஞர் இன்குலாப்பின் நேர்காணல் ஒன்று உள்ளது.
1965 ல் இந்தி திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் நினைவுகளாக இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற முன்னுரையுடன் உள்ளது அந்த நேர்காணல்.
1963 முதல் 1965 வரை இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றாலும் 1965 ஜனவரியில் இந்தி ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து மதுரைப் பகுதியில் மையம் கொண்ட மாணவர்கள் போரட்டத்தை மையம் கொண்டதாக உள்ளது இன்குலாப் நேர்காணலின் முதல் பகுதி. 1965 ஜனவரி 26 குடியரசு நாளில் மாணவர்கள் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தப் பேரணிக்கு உணர்வூட்டுவதற்காக, வலு சேர்ப்பதற்காக, மாணவர்களை கிர்ச்சியடையச் செய்வதற்காக இப்படி ஏதோ ஒரு (சுயநலமற்ற) காரணத்திற்காக அதற்கு முதல் நாள் ஜனவரி 25ல் மாணவர்கள் காமராசனும், காளிமுத்துவும் சட்டப்பிரிவை எரித்து கைதாகிறார்கள். இந்தச் செய்தியை மதுரை முழுக்க பரப்பினால்தான் கைதானதற்கான நோக்கம் நிறைவேறும். துண்டறிக்கை விநியோகப் பொறுப்பு சாகுல் ஹமீதிடன் (இன்குலாப்பிடம்) தரப்படுகிறது. துண்டறிக்கை விநியோகச் செயல்திறன் பார்த்து, ஆச்சர்யப் பட்டு ‘இதை யாரோ ஒரு நக்சல்பாரிதான் செய்தான் அப்படீன்னு பயந்தான்’ என்று சொல்கிறார். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது. இன்றுவரை நம்ம மக்களுக்கு முதலாளித்துவ ஊடகங்களின் புண்ணியத்தில், நக்சல்பாரி என்றால் என்ன என்றே சரியாகத் தெரியாது. 1965லேயே நக்சல்பாரி பற்றி பேசியது ஆச்சரியமாக இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் யாராவது ஒரு அறிவாளி சொல்லியிருக்கலாம் என சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்தால் சிரித்துச் சிரித்து குமட்டல்தான் வருகிறது.
‘வசந்தத்தின் இடி முழக்கம்’ எனச் சீன வானொலியால் புகழ்ந்துரைக்கப்பட்ட நக்சல்பாரி (கிராமத்தில் கூடிய விவசாயத் தொழிலாளர்களின்) எழுச்சி நடந்தது 1967ல். நம்ம சாகுல்ஹமீதைப் பார்த்து யாரோ நக்சல்பாரி என்று ஆச்சரியப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 1965ல். இன்குலாப் (புரட்சி) என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சும்மாவா? இல்லையென்றால் இப்படி இருக்கலாம். நம்ம ‘புரட்சி’ய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே யாரோ ஒருத்தர் ‘நக்சல்பாரி’ன்னு சொல்லிட்டாரு. அதனால நாமெல்லாம் ‘நக்சல்பாரி’ கிராமத்துலதான் கூடவேண்டும் என்று சாரு மஜூம்தார் தலைமையில தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். மொத்தத்தில் தமிழ்நாட்டில் 1967க்குப் பிறகே மாவோவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, 1968 ல் ‘புதிய தலைமுறை’ பத்திரிகை தொடங்கி 1970 வரை தொடர்ந்து நடத்திய எஸ்.வி.ஆர்., எஸ்.என்.நாகராஜன், புலவர் ஆதி, கோவை கி.பழனிச்சாமி (கோவை ஞானி) இவர்களையெல்லாம் கூட யாரும் இவ்வளவு முன்னதாக ‘நக்சல்பாரி’ என அடையளம் காட்டவில்லை. நக்சல்பாரி வழிவந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் பண்பாட்டு இதழான ‘புதிய மனிதன்’ பத்திரிகையில் சிறப்பாசிரியராக இருக்க முடியாமல் ஓடிவந்த சாகுல்ஹமீதைப் பார்த்து நக்சல்பாரி எழுச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, நக்சல்பாரி என அடையாளம் காட்டியிருக்கிறார்கள். சரி ‘நக்சல்பாரியின் முன்னோடி’ என சாகுல் ஹமீதுக்குப் பட்டம் கொடுப்போம். அவர் யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். பிறகு யாராவது ஏதாவது சொன்னால் திருப்பிக் கொடுத்து விடுவார். அவர் உணரும்வரை பொறுத்திருப்போம். அதுவரை நாம் அவரை ‘நக்சல்பாரியின் முன்னோடி’ என்போம்.
இனி... இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்திய முன்னோடிகளில் ஒருவரான சாகுல் ஹமீதுக்கு அடுத்த ஆண்டிலேயே (படித்து முடித்ததுமே) சென்னையில் வேலை கிடைத்து விட்டது. ஆனால், மாணவர்களின் இந்தப் பேரணியை வழிநடத்திய, போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இவர்களின் பேராசிரியர் இலக்குவனாரின் ஆசிரியப் பணியை காங்கிரசின் பக்தவச்சலம் அரசு பறித்துக் கொண்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஆறுமாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஆட்சி மாறி முதலமைச்சரான அண்ணாதுரையின் தனிப்பட்ட முயற்சியில் சென்னை மாநிலக் (அரசு) கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். இலக்குவனார் ஓய்வு பெற்ற போது அவருடைய பணிப்பதிவேட்டைக் காணவில்லை என்று சொல்லி அவருக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது. காணமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் என்பது அன்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழ் வித்தகர் கலைஞர் இம்மாதம் (ஜூலை 2009) பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கப் பெற்று, விரைவில் திரைக்கு வந்து மாவட்டம், வட்டம் என தலைக்கு இத்தனை டிக்கெட் வாங்கி குறைந்தது 25 நாட்கள் ஓட்ட வேண்டும் என கட்டடையிடப்பட உள்ள ஒரு உன்னத திரைக்காவியத்தை எழுத்தோவியமாக ஒரு வார இதழில் வடித்து தமிழுக்கு பெரும்பங்காற்றிக் கொண்டிருந்தார். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் அதன் சாரம் குறையாமல் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை, தமிழினத்தின் பெருமையை உலகுக்குணர்த்திய இலக்குவனார் போன்ற சாமானியத் தமிழனுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கான அற்பப் பணிகளில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அரசியல் மாற்றங்களால் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். இலக்குவனாரின் ஓய்வூதிய விபரம் அறிந்து, ஒரு தனி அலுவலரை நியமித்து, புதிதாக பணிப்பதிவேட்டை விசாரணைகளின் அடிப்படையில் உருவாக்கி ஓய்வூதியம் பெற்றுத் தர முயற்சித்தார். இதற்குள் இலக்குவனார் இறந்தும் போனார். பின்னர் அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதிய நிலுவையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. இத்தனை அவமானங்களையும், இன்னல்களையும் இலக்குவனார் அடைந்ததற்குக் காரணம் அவரது தமிழ்ப்பற்றும், 1965 போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாடும்.
இலக்குவனாரைப் போல, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இழந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம். போராட்டத்தின்போது ஒரு துளியினும் சிறிதான பங்களிப்பாற்றி அந்தப் பங்களிப்பினையே காரணமாக்கி பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதனிலும் அதிகம். இடதுசாரி எழுத்தாளர்களைப் பற்றி இரண்டாம் கட்டமாகத் திரும்புகின்ற பேச்சு ஏன் ‘புதிய தலைமுறை’ பற்றிப் பேசவில்லை. இன்குலாப் சிறப்பாசிரியராக இருந்த ‘புதிய மனிதன்’ இருந்த திசைக்குக்கூட பேச்சு வரவில்லை.
நேர்காணல் அதன் திசையில் சென்று கொண்டிருந்தது. இன்குலாப்பிற்கு வயதாகி விட்டது. உடல்நலக் குறைவு வேறு. அதனால் நிறைய மறந்திருக்கலாம். மாற்றிச் சொல்லியிருக்கலாம். சரி. அப்படி இருந்தாலும்கூட இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டியது நேர்கண்ட பாட்டாளி, மேரி, வைகை வசந்தன் ஆகியோரது கடமை அல்லவா... எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது...? ஆம் சரியாகத்தான் இருக்கிறது.
‘பேசப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படும் அரசியல்
பேசப்படாத வார்த்தைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது’
- இந்து 21/07/2009
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, July 21, 2009
Thursday, July 16, 2009
பிரதியின் நிறம்
1.
கடந்த நூற்றாண்டின் (90களின்) இறுதியில் திருப்பூரில் உள்ள சேவ் என்கிற அமைப்பு குழந்தைத் தொழிலாளர்கள் நிலைபற்றித் தெரிந்து கொண்டால் தங்கள் படைப்புகளில் அதுபற்றிப் பேசுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அதையே நோக்கமாகக் கொண்டு தமிழ் எழுத்தாளர்களுக்கான இரண்டு நாட்கள் கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சேவ் அலோசியசுடன் இணைந்து கனவு சுப்ரபாரதி மணியனும் இந்தக் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது அவர் யுனிசெஃப்பின் ஆலோசனைக் குழுவில் இருந்தார் என நினைக்கிறேன். (செய்தி தவறாகவும் இருக்கலாம்)
இந்தக் கருத்தரங்கம் ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு உள்ளே நடந்த விஷயங்கள் இந்த சமயத்தில் தேவையில்லை. பொதுவாகத் தாமதமாகக் கூட்டங்களுக்கு வருவதை ஒரு தேசியக் கடமையாகக் கொண்டவர்களும், முன்தாகவே வந்து காத்திருப்பதை தேசியக் கடனாகக் கொண்டவர்களும் எப்போதும் உண்டு. கருத்தரங்கின் முதல்நாள் காலை. கடமையாளர்கர்களுக்காக் காத்திருந்த கடன்காரர்களில் சுப்ரபாரதி மணியன், மேலாண்மை பொன்னுச்சாமி, ரவி சுப்பிரமணியன், மதிகண்ணன், ஸ்ரீபதி பத்மநாபா, சுதேசமித்திரன் ஆகியோர் விடுதிக்கு எதிரில் உள்ள தேநீர்கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
பல தருனங்களில் (இலக்கிய) அரங்க உரையாடல்களைவிடவும் அங்கே தரப்படும் தேநீர் சுவையானதாக இருக்கும். சில தருனங்களில் தேநீர்க்கடைத் தேநீரை விடவும் அங்கே நடைபெறும் உரையாடல்கள் சுவையானதாக இருக்கும். அப்படியான சில தருனங்களில் ஒன்றாக அது இருந்ததாக நான் உணர்ந்தேன். கூடியிருந்தவர்களில் மூவருக்கு ஏற்கனவே முற்போக்கு அடையாளமும், மீதி மூவருக்கு நவீனத்துவ அடையாளமும் விளக்குகள் வைத்து கொஞ்சம் சிறிதும் பெரிதுமாக ஒளிவட்டம் கட்டியிருந்தது. முற்போக்கு / நவீனத்துவ விவாதத்தின் பகுதியாக யாரோ உரையாடலைத் தொடங்கி வைத்தார்கள். சிலர் தொடர்ந்தார்கள்.
‘இப்ப நிறையப் பேரு எழுதுறாங்க. ஆனா... என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலை...’
‘உங்களுக்குப் புரியலைன்னு சொல்லுங்க’
‘எனக்கே புரியலைன்னா சாதாரண ஜனங்களுக்கு எப்படிப் புரியும்?’
‘அது என்ன? எனக்கே... நீங்களாவே ஒங்களா சாதாரண ஜனங்கள விட உயர்வா நினைச்சுக்கிட்டா எப்படி? உங்களுக்குத்தான் புரியலையில்ல. அப்புறம் என்ன?’
‘முதல்ல படிக்கச் சொல்லங்கப்பா’
‘படிச்சுட்டுத்தான் புரியலைன்னு சொல்றோம்’
‘சொல்றோமா?... சொல்றேனா?...’
‘சரி சொல்றேன். ஒன்னுமே புரிய மாட்டேங்குது’
‘ஒன்னுமே புரியாமயா ஆயிரக்கணக்கான காப்பீஸ் போகுது’
‘சரி விடுங்க எங்கள மாதிரி சாதாரண ஜனங்களுக்குப் புரியலை. அதைத்தான் செல்றேன்’
‘வருங்காலத்துல பாடத்திட்டத்தில சேர்த்துக்கிட்டு அதுக்கு ஒரு நோட்ஸ் போடுவாங்க... அப்பப் புரியும்...’
‘நோட்ஸ் போடுறவன் நம்ம சொல்ல நினைச்சத விட்டுட்டு என்னன்னமோ சொல்லுவானே’
‘அது நல்லதுதானே. ஒரு பிரதி வேற வேற வாசகனுக்கு வேற வேற அர்த்தத்தைத் தரும்போது தானே முழு நவீனத்துவப் பிரதியா மாறும்’
இந்த நேரம் வரை உரையாடலில் பெரிதும் தலைகாட்டாமல் இருந்த மேலாண்மை பொன்னுச்சாமி, ‘இன்னும் சரியா 5 வருஷம். அதுக்கப்புறம் நான் எழுத மாட்டேன்’ என்றார்.
யரோ குரல் மாற்றி (எம்ஜிஆர் கால திரைப்படங்களின் வில்லன் குரலில்) ‘நல்ல முடிவு’ என்றார்கள்.
மதிகண்ணன் குறுக்கிட்டு ‘அண்ணே நீங்க சொல்றது சரியில்லை’
‘உண்மைதான் மதி. இன்னும் 5 வருஷத்துக்கப்புறம் நான் எழுதப் போறதில்லை’
‘அதுலதான் பிரச்சனை 5 வருஷத்துக்கப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தொடர்பா எழுத வேண்டியது வந்தால்?’
‘எழுத மாட்டேன்’
‘சாத்தியமே இல்லை. வேணுமின்னா இப்படி யோசிங்க. இன்னும் 5 வருஷத்துக்க எழுதப் போறதில்ல. அதுக்கப்புறம் எழுதுவேன்னு சொல்லுங்க’
‘இல்லை. இல்லை. நான் தெளிவாத்தான் இருக்கேன். இன்னும் 5 வருஷம்தான். அதுக்கப்புறம் நான் எழுத மாட்டேன்’
‘ரிட்டயர் ஆகக்போறேன்னு சொல்றவர ஏன் தொந்தரவு பன்றீங்க. விடுங்க’ என்று யாரோ சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து அலோசியஸ் எல்லோரையும் மேலே வரச் சொல்லி குரல் கொடுத்தார்.
அலோசியஸின் குரலால் இடை நின்று போன அந்த உரையாடல் அதன் பின் இன்றுவரை மீண்டும் தொடங்கப்படவும், தொடரப்படவும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த உரையாடலை இரயில் ஸ்நேகம் போல் தேநீர் உரையாடல் என தொடர்புடையவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் பல தருனங்களில் என் மனதிற்குள் வந்து செல்லும் உரையாடல்களில் ஒன்று இது. குறிப்பாக அந்த ஆறுபேரில் யார் பெயரை எங்கு பார்த்தாலும் இந்த உரையாடல் மனக்கண் முன் எழும்.
2.
இந்தியத் தலைநகரில் இருந்து வந்து கொண்டிருக்கக்கூடிய வடக்கு வாசல் 2009 ஜூலை இதழில் மேலாண்மை பொன்னுச்சாமி களவுக்கலை என்று ஒரு கதை எழுதியிருந்தார். அவரது பெயரைப் பார்த்ததும் அந்த உரையாடல் மனதில் தோன்றியது. உரையாடலைத் தொடர்ந்து நான் கதை படித்தேன். கந்தையா நாயக்கர் புஞ்சையில் சாமத்தில் அகத்திக் கொலை திருடி கோணார் வீட்டு செம்மறிக் குட்டிகளுக்கு பசியாற்றும் நல்ல செம்மறி மேய்ப்பன் முத்தன். பார்த்த திரைப்படங்களை நாயக நடிகரைப் போலவே நடித்துக் காட்டிக் கதை சொல்லும் 17வயது வித்தகன் அவன். (18வயது வரை குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் தொடர்பான உடன்படிக்கை சொல்வதாக சேவ் நடத்திய கருத்தரங்கில் திரும்பத் திரும்பச் சொல்லி, 18 வயதுக்குக் குறைவானவர்களைப் பற்றி எழுதினால் அது குழந்தைகளைப் பற்றியது என வழியுறுத்தினார்கள். மேலாண்மையும் அதை மறக்காமல் முத்தனை அடிக்கடி குழந்தை என்கிறார்) பக்கத்து ஊரில் இருந்து ஒரு பசுவும் சில வெள்ளாடுகள் மேய்ப்பதற்காகவும், கதை கேட்பதற்காவும் முத்தனின் மேய்ப்பு நிலம் தேடி வரும் 24 வயது பழுத்த குமரி பார்வதி. (பழுத்த குமரி என்பது மேலாண்மையின் வார்த்தைகள்) ஒருநாள் அவன் வேற்று மொழிப் படம் (முறைகேடான படம் - மேலாண்மை) பார்க்கிறான். படம் முழுக்க முறைகேடான மோகத் தினவுகள். முறைகேடுகளே திரைப்படமாகி... திரைப்படமே முறைகேடுகளாகி... (இதில் உள்ள முறைகேடான வார்த்தைகள் மேலாண்மையினுடையவை). படம் பார்த்த மறுநாள் பார்வதி, வற்புறுத்திக் கதை கேட்க. அவன் வழக்கம் போல் கதை சொல்கிறான். அதை எப்படி நடித்துக் காட்டிச் சொல்கிறான் என மேலாண்மை விளக்கி... கதையை வழக்கம் போல் (கூத்துப் பார்த்து பேஷ்... பேஷ்... சொல்வது போல் வட்டாக வழக்கில் கதை எழுதி... வெள்ளாள வழக்கில் முடிப்பாரே அதே வழக்கப்படி) ‘வேப்பமரத்து நிழலில் வேலிமரத்துப் புதர் மறைப்பில் பரஸ்பரம் ஒருவரையொருவர் மேய்கிறதைப் பார்க்க இயலாமல் மேகத்துக்குள் ஒளிகிற சூரியன்’ என முடிக்கிறார்.
முடிப்பு வாக்கியமே இவரு கிராமத்தை விட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சுன்றதச் சொல்லுது. இந்த முறைகேடான கதைக்கு (இந்த முறை ‘முறைகேடான’ என்ற வார்த்தை என்னுடையது) எப்படி முற்போக்கு முலாம் பூசுவது. ம்... அவள் முதிர் கன்னி... சமூக நிலைமை... அக உணர்வு... புற நிலை யதார்த்தம்... அப்பாடா, இந்த வார்த்தைகள் போதும். முறைகேடற்ற பாலியல் தொடர்பான விஷயங்களை பெண் மைய அரசியல் புரிதலுடன் மாலதி மைதிரியும், சுகிர்தராணியும் எழுதினால் அது நீலம் (பிற்போக்கு, தினவு). இதே விஷயத்தை சாரு நிவேதிதா எழுதினால் பச்சை (போர்னோ). சரோஜாதேவி எழுதினால் மஞ்சள் (சட்டவிரோதம்). சட்டத்திற்க உட்பட்டு யவுனிகா ஸ்ரீராம் எழுதினால் நவீன மஞ்சள் (நவீனம்). சுந்தரராமசாமி எழுதினால் வெள்ளை(த்திமிர் / வக்ரம்). மேலாண்மை பொன்னுச்சாமி எழுதினால் சிவப்பு (முற்போக்கு / புரட்சி).
இன்குலாப் ஜிந்தாபாத்?
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் க(ளவுக்க)லைஞர்கள் சங்கம் ஜிந்தாபாத்?
1996ல் வெளியான மேலாண்மை பொன்னுச் சாமியின் ‘உயிர்க்காற்று’, ‘கோடுகள்’ நூல்களை விமர்சனம் செய்கையில் (2003/2004 சிறகு இதழ்கள்) கவிஞர் விக்ரமாதித்யன் ‘தயவுசெய்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சுத்த இலக்கியவாதிகளை விமர்சனம் செய்யும் அதேசமயம், தங்கள் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்து சரிப்படுத்தட்டும். சும்மா கலை இலக்கிய இரவு நடத்தி புண்ணியமில்லை’ என்பார்.
மேலும் ‘தமுஎசவில் பங்குபெறும் வாலிபர்களை நினைத்து வருத்தமாக இருக்கிறது. மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்களை அவர்கள் முன்மாதிரியாகக் கொண்டால், என்ன ஆவர்கள் என்ற கவலை. முற்போக்கு இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியவில்லை. நிகழ்காலம் பற்றியே கேள்விதான். வேறென்ன சொல்ல’ என்று விமர்சனத்தை முடிப்பார்.
3.
மூன்றாவது 5 வருடம் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலாண்மையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஜீவா தொடங்கி வைத்த பண்பாட்டு மார்க்சிய அமைப்பின் தொடர்ச்சியான அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இன்று ஃப்ராங்பர்ட்டுகள் முன்னெடுக்கும் பண்பாட்டு (எதிர்)மார்க்சியத்தை நோக்கி நகர்கிறார்களா? நகர்த்தப்படுகிறார்களா?
இந்தக் கேள்வியின் பின்னே நிறைய சமூக, அரசியல், பண்பாட்டு, வர்க்கசார்புக் காரணங்களும் இருக்கின்றன. ஏனெனில் முழக்கங்களின் வரிசை
இன்குலாப் ஜிந்தாபாத்?
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஜிந்தாபாத்?
என்பதுடன் முடியாமல்
-------------- ஜிந்தாபாத் என்றும் இருப்பதால்.
- இந்து
- புதன், 15 ஜூலை 2009

Subscribe to:
Posts (Atom)